Published : 05,Jan 2017 03:55 AM

பாதியாக குறைந்த மஞ்சள் விளைச்சல்.. வேதனையில் விவசாயிகள்..!

Sad-news-for-turmeric-farmers

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், மஞ்சள் உற்பத்தியும் மகிழ்ச்சி தருவதாக இல்லை. மஞ்சள் பயிர்களை நோய் தாக்கியதில் அதன் உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிக்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களில்,‌ மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. பருவமழை பொய்த்துப்போனதால், பவானிசாகர் அணை தண்ணீரின்றி காணப்படுகிறது. இதனால் மஞ்சள் சாகுபடிக்கான போதிய தண்ணீர் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. அதோடு மட்டுமில்லாமல் மஞ்‌சள் பயிரை கிழங்கு அழுகல் நோயும் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் அதன் விளைச்சல் பாதியாகக் குறைந்திருக்கிறது.

ஒரு லட்சம் ரூபாய் வரை ஏக்கருக்கு செலவு செய்துள்ள நிலையில், தற்போது 40 ஆயிரம் ரூபாய் வரையே திரும்ப கைக்கு கிடைக்கும் நிலை இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், மஞ்சளை வெட்டியெடுத்து வேகவைத்து பதப்படுத்தும் விவசாயி கூலித்தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மஞ்சள் விவசாயிகளைக் காக்க, மஞ்சளுக்கு உரிய விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், தற்போது ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்