[X] Close

விசாரணைக் குழுவின் முன் ஆஜராக தயார்: திண்டுக்கல் சீனிவாசன்

Dindukkal-Srinivasan-about-Jayalalitha-death-inquiry

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் முன் ஆஜராகி பதிலளிக்க தயாராக இருப்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, சென்னையில் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், தேவையென்றால் எல்லாரும் சென்று விளக்கமளிக்கலாம். ஏற்கனவே அனைவரும் வந்து தகவல் தெரிவிக்குமாறு விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தகவல் கூறுவதில் ஒரு தவறும் இல்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் முன் ஆஜராகி பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.” என்று அவர் கூறினார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close