Published : 23,Feb 2023 06:20 PM

பிரதீப் ரங்கநாதனை இயக்கும் விக்னேஷ் சிவன்? - வெளியான தகவல்!

Vignesh-Shivan-s-next-is-with-Director-actor-Pradeep-Ranganathan

தனது அடுத்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கோமாளி’ படத்தைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கி தயாரித்திருந்தப் படம் ‘லவ் டுடே’. இளைஞர்கள் மற்றும் 2K கிட்ஸ்களை கவரும் வகையில் உருவான இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் சுமார் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்று சாதனைப் படைத்தது. சமீபத்தில் இந்தப் படத்தின் 100-வது நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

image

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் வகையில் கதை சொன்னதாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே62’ படத்தை இயக்குவதாக லைகா அறிவித்த நிலையில் சில காரணங்களால் அந்தப் படத்தை இயக்குவதிலிருந்து விலகியதாகக் கூறப்படும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்