
ஹரியானாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, பள்ளி ஊழியர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் என்ற பகுதியில் ஓம் சர்வதேசப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயின்று வரும் சிறுமியை, அதே பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித்தத்தில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இரு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் எந்தப் புகாரும் சிறுமி கூறவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.