Published : 20,Nov 2022 08:44 PM

இப்படியொரு ஆழமான காதலா! இறந்த காதலிக்காக காதலன் செய்த செயல்.. திகைத்துபோன உறவினர்கள்

A-video-of-a-young-man-marrying-his-dead-girlfriend-is-going-viral-on-social-media

உயிரிழந்த காதலியை திருமணம் செய்து கொண்ட இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அசாம் மாநிலத்தில் பிடுப்பன் என்ற இளைஞரும் பிராத்தனா என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலித்து வந்தது இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. பின்னர், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரும் சம்மதித்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு, பிராத்தனாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அவர் கவுஹாத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிராத்தனா உயிரிழந்தார்.

image

இதையறிந்த அவரது காதலன் பிடுப்பன், திருமணம் செய்வதற்கான ஏற்பாட்டுடன் காதலி பிராத்தனாவின் வீட்டிற்கு வந்தார். அவர் வந்தவுடன், அவர் பிராத்தனாவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அங்கிருந்தவர்களுக்கு அறிவித்தார். அங்கிருந்தவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போய் நின்றனர். பின் அவர் வைத்திருந்த குங்குமத்தை, உயிரற்ற உடலாக கிடந்த பிராத்தனாவின் முகத்தில் தடவி திருமணத்திற்கான சடங்கை செய்தார்.

தொடர்ந்து மாலையை காதலிக்கு போட்டு, பிராத்தனாவின் உடலில் வைத்து மற்றொரு மாலையை இவர் போட்டுக்கொண்டார். அவர் செய்த அனைத்து சடங்குகளின் போதும், அவர் அழுதுகொண்டே செய்யும் காட்சிகள் வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலும் அந்த இளைஞர் வாழ்க்கை முழுவதும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார். ''பிராத்தனாவை அவர் இந்தளவுக்குக் காதலிப்பார் என்று எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது" என்று பிராத்தனாவின் உறவினர்கள் கண்கலங்கினர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்