Published : 01,Jan 2017 11:23 AM

ஒரு தலைக்காதலால் விபரிதம்... கல்லூரி பேராசிரியைக்கு கத்திக்குத்து

Professor-Attacked-By-Lover

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி பேராசிரியையை கத்தியால் குத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சின்னதுறை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த அனு கெயின்சி, நாகர்கோவிலிலுள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாகவுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பெஜி காஸ்ட்ரோ என்பவர் அனு கெயின்சியை காதலித்து வந்துள்ளார். அவருடைய காதலை ஏற்க மறுத்துவிட்ட அனு கெயின்சிக்கு வரும் 5ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இன்று காலை புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை முடித்து அனு கெயின்சி வீடு திரும்பியுள்ளார். அப்போது, அங்கு வந்த பெஜி காஸ்ட்ரோ, பேராசிரியையை கத்தியால் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவருக்கு திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்