Published : 21,Oct 2022 10:15 PM
தீபாவளி: கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா ஆம்னிப் பேருந்துகள்? - அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தமிழகம் முழுவதும் ஆம்னிப் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து பல்வேறு இடங்களில் குழுக்கள் ஆய்வு செய்கிறப் பணியில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், கடந்த ஆண்டுகளை விட முன்பதிவு செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த கேள்விக்கு, அது தொடர்பாக பெரிய அளவில் புகார்கள் வரவில்லை என்றும், அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு குழுக்கள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து ஆய்வுசெய்து வருவதாகவும் கூறினார்.