Published : 11,Sep 2022 01:43 PM
ஒட்டன்சத்திரம்: சாலையை கடக்க முயன்ற முதியவர் - கார் மோதி பரிதாபமாக உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் முதியவர் ஒருவர் சாலையை கடக்கும்போது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்ன முத்து என்ற முதியவர், சின்னயகவுண்டன் வலசு அருகே சாலையை கடக்க முற்பட்டபோது பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில் அவருக்கு, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்லமுத்து உயிரிழந்தார்.