[X] Close

7 வயது மாணவன் உயிரிழந்த விவகாரம் - மீண்டும் திறக்கப்பட்ட பள்ளி 

Ryan-student-murder--School-reopens-today

டெல்லியில் பாலியல் வன்கொடுமையால் 7வயது மாணவன் உயிரிழந்ததையடுத்து, மூடப்பட்டிருந்த ரயான் இன்டர்நேஷனல் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் குர்கான் பகுதியில் உள்ள ரயான் இன்டர்நேஷனல் பள்ளியில் கடந்த வாரம் 7 வயது மாணவன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தான். இதையடுத்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி பேருந்து நடத்துனர் அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ரயான் இன்டர்நேஷனல் பள்ளி ஒரு வார விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கிடையே, மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு உறுதியளித்தது. இருப்பினும், உயிரிழந்த மாணவனின் வகுப்பிற்கு வெறும் 4 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தது குறிப்பிட்டதக்கது. 
 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close