Published : 17,Jul 2022 07:35 AM

’நீ எந்த ஊரு.. நான் எந்த ஊரு.. முகவரி தேவையில்ல’ - உண்மையான நட்பின் உன்னதமான வீடியோ!

heartwarming-video-of-swiggy-guy-pulls-zomato-guy

உணவு டெலிவரி செய்யும் நபர்கள் குறித்த சில எதிர்மறையான வீடியோக்கள் செய்திகள் வாயிலாகவோ, சமூக வலைதள வாயிலாகவோ அறிந்திருப்போம். ஆனால், மழை, வெயில் பாராது வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் உணவுகளை கொண்டு சேர்க்கும் டெலிவரி ஆட்களின் பணி செய்யும் விதம் குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டோம்.

டெலிவரி செய்யும் பணிக்கு இருசக்கர வாகனம் வைத்திருப்பதே முக்கியமான தேவை. ஆனால், வேலையில்லாமல் திண்டாடும் சிலர் வேறு வழியின்றி டெலிவரி பணிக்கும் செல்கிறார்கள். ஆனால் அனைவராலும் டூ வீலர் வைத்திருக்க முடியவில்லை. இதனால் சிலர் சைக்கிளிலும் சென்று டெலிவரி பணியை மேற்கொள்கிறார்கள்.

அப்படி சைக்கிள் ஓட்டி, உரிய நேரத்தில் சென்றடைவதில் டெலிவர் ஊழியர்கள் சற்று சிரமத்தை சந்திக்கிறார்கள். இந்த நிலையில் டெல்லியில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த ஸொமேட்டோ டெலிவரி ஊழியருக்கு பைக்கில் சென்ற ஸ்விக்கி ஊழியர் ஒருவர் உதவிக்கரம் நீட்டியது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அது தொடர்பான வீடியோவை சன்னா அரோரா என்ற பெண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, டெல்லியின் தாங்கமுடியாத சூடான நாட்களில் இதுபோன்ற உண்மையான நட்பை காணமுடிவது மகிழ்ச்சியளிப்பதாக கேப்ஷன் இட்டிருக்கிறார்.

அந்த வீடியோ 20 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், நிறுவனங்களால் பிரிந்திருந்தாலும், நட்பால் இணைந்திருக்கிறார்கள் என பலரும் கமென்ட்டில் பதிவிட்டிருக்கிறார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்