Published : 16,Jul 2022 09:50 AM

நாமக்கல்: விற்பனை மந்தம் - தொடர்ந்து சரிவை சந்திக்கும் முட்டை விலை

Namakkal-Slow-sales-Egg-prices-continue-to-decline

நாமக்கல் மண்டலத்தில் ஒரே வாரத்தில் ஒரு ரூபாய் 10 காசுகள் சரிந்த முட்டை விலை, 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைத்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், அன்று ஒரே நாளில் 30 காசுகளும், 11ஆம் தேதி 30 காசுகளும், 14ஆம் தேதி 30 காசுகள் என படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் 20 காசுகள் விலை குறைப்பு செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலை ஒரு ரூபாய் 10 காசுகள் விலை குறைக்கப்பட்டுள்ளது,

image

இதுகுறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும்போது... ஆடி மாத பிறப்பை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் கோவில் திருவிழாக்ள் நடைபெறுவதால் பலர் சைவ உணவிற்கு மாறியுள்ளனர். இதேபோல் கேரளாவிலும் முட்டை விற்பனை வீழ்ச்சி அடைந்து அதிகளவு முட்டைகள் தேக்கம் ஏற்பட்டதோடு, பிற மண்டலங்களிலும் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

இதனால், தமிழகத்தில் முட்டை விற்பனையை அதிகரிக்கும் வகையில் பண்ணை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாகவும், இவ்விலை ஆடி மாதம் முடியும் வரை சற்று குறையவே வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்