Published : 04,Jul 2022 10:00 PM

கிருஷ்ணகிரி: வாகன சோதனையில் மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா – மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Krishnagiri-Gutka-caught-in-vehicle-inspection-Do-you-know-how-much-it-is-worth

கர்நாடகாவிலிருந்து ஓசூர் வழியாக கடத்திவரப்பட்ட 1639 கிலோ குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பூனப்பள்ளி வாகன சோதனைச் சாவடியில் மத்திகிரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து தமிழகம் நோக்கி வந்த ஈச்சர் வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர். அதில் துணி மூட்டைகளுக்கு இடையே 62 மூட்டைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.

image

62 மூட்டைகளில் 1639 கிலோ எடையில் இருந்த குட்காவை வாகனத்துடன் பறிமுதல் செய்து ஈச்சர் வாகனத்தை ஒட்டிவந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணி (29) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட குட்காவின் மதிப்பு 8 லட்சத்து 4000 ரூபாய் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஈச்சர் வாகனத்தின் மதிப்பு 18 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்,

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்