Published : 12,Sep 2017 02:26 PM
சசிகலாவை நீக்கியது செல்லாது; திவாகரன் மகன்

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் அணி இரண்டும் ஒன்றாக கூடி பொதுக்குழுவை கூட்டி அதிமுக பொதுச்செயலாளராக ஏற்கெனவே இருந்த சசிகலாவை நீக்கி உள்ளனர். அதை கண்டிக்கும் விதத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்திட்டுள்ள ஜெயானந்த் “ஏற்கெனவே ஒ.பன்னீர்செல்வத்தை சசிகலா கட்சியை விட்டு நீக்கிவிட்டார். சசிகலாவை இவர்களால் நீக்க முடியாது. ஒ.பி.எஸும். , இ.பி.எஸும் கூடிதான் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுத்தார்கள். எனவே இந்தத் தீர்மானம் செல்லாது”என்று கூறியிருக்கிறார்.