[X] Close

சாரண, சாரணியர் தலைவரா ஹெச்.ராஜா? கருணாஸ் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு

Scenario--Scout-head-H--Raja--3-MLAs-opposed-to-Karunas

சாரண-சாரணியர் அமைப்புக்கு ஹெச்.ராஜாவை தலைவராக நியமிக்க முயற்சிக்கும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என்று, எம்.எல்.ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சாரண-சாரணியர் அமைப்புக்கு ஹெச்.ராஜாவை தலைவராக நியமிப்பதற்காகக் கல்வித்துறை அதிகாரிகளை மறைமுகமாக முதலமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் மிரட்டுவதாக தெரிவித்துள்ளனர். 

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிவரும் ஹெச்.ராஜாவை தலைவராக்க முயற்சி செய்வது அதிர்ச்சியளிப்பதாகவும், பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் செயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும் எம்.எல்.ஏக்களான  தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் கூறியுள்ளனர். சகிப்புத்தன்மையும், பன்முக கலாசாரத்தை ஊக்குவிக்கும் பரந்தமனமும், தொலைநோக்கு பார்வையும் கொண்ட பொதுவான ஒரு நபரை நியமிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close