[X] Close

திமுக, அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது: விஜயகாந்த்

People-should-not-vote-for-DMK-and-AIADMK--Vijayakanth

திமுகவும், அதிமுகவும் மக்களை மாறி மாறி ஏமாற்றி வருவதாகவும், அந்த இரு கட்சிகளுக்கும் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 


Advertisement

மதுரையில் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவர் இதனைக் கூறினார். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளால் மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். 

விஜயகாந்திற்கு முன்னதாக பேசிய அவரது மனைவி பிரேமலதா, தமிழகத்தில் விரைவில் நல்லாட்சி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி அதிமுக அரசை கலைத்துவிட்டு மறுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close