Published : 04,May 2022 03:45 PM

சென்னை: சரக்கு ஆட்டோ மீது பைக் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Two-wheeler-collision-with-freight-auto-Adolescent-mortality

சென்னை அடையாறு பகுதியில் சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அடையாறு ஆற்றின் பாலத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது பைக் மோதியதில் இளம்பெண் பலியானார். வாலிபர், மற்றொரு இளம்பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

image

சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் (25). இன்று அதிகாலையில் தனது தோழிகளான திருச்சியைச் சேர்ந்த தமிழரசி (22) திருவண்ணாமலையைச் சேர்ந்த ஐஸ்வர்யா (22) ஆகிய 2 பேரை பைக்கில் அழைத்து கொண்டு அடையாறு ஆற்றின் பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். ஒரே பைக்கில் 3 பேரும் சென்றனர்.

image

அடையாறு ஆற்றின் பாலத்தின் கடைசியில் ஸ்பீடு பிரேக் மீது வேகமாக ஏறிய போது முன்னால் சென்ற சரக்கு ஆட்டோ மீது பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த தமிழரசி இறந்து போனார். பிரவீன், ஐஸ்வர்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

image

தகவல் அறிந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தமிழரசியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பிரவீன், ஐஸ்வர்யா இருவரும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

image

சரக்கு ஆட்டோவை செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மயிலாப்பூர் மார்க்கெட்டிற்கு காய்கறிகளை கொண்டு சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. விபத்து தொடர்பாக தொடர்ந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

விசாரணையில், படுகாயமடைந்த பிரவீன் கிளப் அவுஸ் மூலம் தமிழரசி, ஐஸ்வர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
2 பேருடன் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்தபோது விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்