ஊ சொல்லவா, ஆலுமா டோலுமா போன்ற பாடல்களை சுட்டிக்காட்டி, இதுபோன்ற சூழலில் நமது தொன்மையான பண்பாட்டை பேணிக்காக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர் நயினார் நகேந்திரன் வலியுறுத்தினார்.
மானியக்கோரிக்கையில் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நகேந்திரன், மாணவர்களிடம் என்ன திறன் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் வகையில் அவர்களை வழி நடத்திட வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், என் மனைவி ஒரு சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு 1,700 ரூபாயை கட்டணமாக வாங்கிவிட்டார்கள் என்றும், தையல் கலையையெல்லாம் ஏன் ஒரு படிப்பாக கொண்டுவந்து, வேலைவாய்ப்பை ஏன் உருவாக்கித் தரக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், பெண்களின் உடை குறித்து பேசிய நயினார் நகேந்திரன், தற்போது பிரபலமாக உள்ள ஊ சொல்லவா? என்பதெல்லாம் என்ன பாடல் என்று கேள்வி எழுப்பினார். மேலும், இதுபோன்ற பாடல் வரிகளால் 50 வருடங்களுக்கு பின்னால் வருவோர், இதுதான் நம் கலாசாரம் என எண்ணிவிடமாட்டார்களா என்றும், இப்போது வரும் ஆலுமா டோலுமா போன்ற பாடல் வரிகளை புரிந்துகொள்வதற்கு இந்தி படித்துவிட்டா அர்த்தம் தேடமுடியும்? என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு இவ்வளவு ஆகின்றது என்பது நயினாருக்கு எப்படி தெரிந்தது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய நயினார் நாகேந்திரன், தனது மனைவி தைக்க கொடுத்த துணியை வாங்க செல்லும்போது தெரிந்துகொண்டதாக தெரிவித்தார். எனவே இதுபோன்ற சூழலில், நமது தொன்மையான பண்பாட்டை நாம் போற்றிப் பேணிக்காக்க வேண்டும் என்றும் நயினார் நகேந்திரேன் வலியுறுத்தினார்.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai