Published : 04,Sep 2017 10:07 AM

ஐ.பி.எல் ஊடக உரிமை எத்தனை கோடி தெரியுமா?

Do-you-know-how-many-IPL-media-rights-

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ரூ.16,347.5 கோடிக்கு ஸ்டார் இந்தியா ஏலத்தில் பெற்றுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம் இன்று ஏலத்தில் விடப்பட்டது. மும்பையில் பி.சி.சி.ஐ சார்பில் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போட்டி போட்டன. இந்த ஏலத்தில் 2018 முதல் 2022 வரையிலான ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347.5 கோடிக்கு வென்றது.

அதன்படி ஐ.பி.எல் ஒளிபரப்பு ஏலத்தின் மூலம் பி.சி.சி.ஐ ரூ.16,347.5 கோடி வருவாய் பெற்றுள்ளது. இதற்கான ஏலமானது கடந்த 28 ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதால், தாமதம் ஏற்பட்டு இன்று நடத்தப்பட்டது. முன்னதாக 2009 ஆம் ஆண்டில் 1.63 பில்லியன் டாலர்களுக்கு சோனி நிறுவனம் ஐ.பி.எல் ஊடக உரிமத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்