Published : 17,Mar 2022 08:44 PM

“மூட நம்பிக்கையில்லை; ஜெர்ஸி நம்பர் 7-ஐ தேர்வு செய்ய இதுதான் காரணம்” - தோனி விளக்கம்!

Reason-Behind-MS-Dhoni-Jersey-Number-Seven-reveals-IPL-Cricket-CSK-Captain

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சரி, ஐபிஎல் கிரிக்கெட் களத்திலும் சரி ‘7’ நம்பர் ஜெர்ஸியை அணிந்து விளையாடி வருபவர். பலரும் அவர் அந்த எண்ணை தேர்வு செய்ய சில சிறப்பு காரணங்கள் இருக்கக் கூடும் என நினைக்கலாம். 

image

‘தோனிக்கு 7-ம் நம்பர் ரொம்பவே லக்கி நம்பராக இருக்கலாம்’ என பெரும்பாலானோர் எண்ணியிருக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் அவர் அந்த சென்டிமென்ட் காரணமாக அந்த எண்ணை தேர்வு செய்திருக்கலாம் என எண்ணி இருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை தற்போது தோணியே சொல்லியுள்ளார். 

“உண்மையாகவே எனக்கு 7-ம் நம்பர் லக்கி நம்பர் என்றெல்லாம் கிடையாது. என்னுடைய ஜெர்ஸியில் அந்த எண்ணை நான் தேர்வு செய்த காரணம் மிகவும் யதார்த்தமானது. நான் பிறந்த தேதியும், பிறந்த மாதமும் 7. அதனால் அந்த எண்ணை தேர்வு செய்தேன். அவ்வளவு தான். 

பொதுவாக 7-ம் நம்பரை பலரும் நியூட்ரல் எண் என சொல்வார்கள். அது நமக்கு ராசியாக இல்லை என்றாலும் எதிராக வேலை செய்யாது என சொல்வார்கள். ஆனால் எனக்கு அது மாதிரியான மூடநம்பிக்கை எல்லாம் கிடையாது. இருந்தாலும் அந்த எண் எனக்கு மிகவும் பிடித்தமான எண்” என தோனி தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்