Published : 10,Mar 2022 04:42 PM

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல்காந்தி வெளியிட்ட கருத்து

I-wholeheartedly-accept-the-judgment-of-the-people-and-my-Congratulations-to-the-winners-says-Congress-MP-Rahul-Gandhi

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா என ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த ஐந்து மாநிலங்களில் ஒன்றில் கூட காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி ட்விட்டர் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

 

“மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை மனதார ஏற்கிறேன். வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த தொண்டர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எனது நன்றிகள். 

இந்த தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்று, இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்