Published : 08,Mar 2022 09:00 AM
சர்வதேச மகளிர் தினத்திற்கு கூகுள் செய்த கௌரவம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கூகுள், சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தை சேர்ந்த பெண்களை குறிப்பிடும் வகையில் கூகுளின் சிறப்பு டூடுல் அமைந்துள்ளது.
இந்த டூடுலில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றும் வகையில் பல துறைகளை சார்ந்த பெண்கள் பற்றிய அனிமேஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.