கோபிசெட்டிபாளையம் அருகே ஞாபக மறதியால் சரிவர படிக்க முடியாமல் மனம் உடைந்து இருந்ததாக கூறப்படும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தீ வைத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவி, டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரது மகள் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி பள்ளி மாணவி வீட்டில் இருந்தபோது ஏதோ ஒரு மாத்திரையை சாப்பிட்டுள்ளார், இது குறித்து மாணவியின் தந்தை கேட்டபோது என்னால் சரிவர படிக்க முடியவில்லை. ஞாபக மறதி அதிகம் இருப்பதால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என கூறியபடி திடிரென வீட்டின் பின்புறம் ஓடிய மாணவி, மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சூடு தாங்காமல் அலறித் துடித்த தன் மகளை அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தள்ளி தீயை அணைத்த தந்தை, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் டி.என்.பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
ஆதனைத் தொடர்ந்து கோபி அரசு மருத்துவமனைக்கு சேர்த்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மக்களின் உடல்நிலை மோசமானதை அடுத்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி