பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ப்ரோ டேடி’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
நடிகர் பிரித்விராஜ் இரண்டாவதாக இயக்கியுள்ள ‘ப்ரோ டேடி’ படத்தில் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவைக் கொண்ட குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லாலுடன் பிரித்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிஃபர்’ சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்தது. தற்போது, இரண்டாவது முறையும் மோகன்லாலுடன் இணைந்துள்ளதால்‘ப்ரோ டேடி’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் படம் நேரடியாக விரைவில் வெளியாகிறது என்று தேதியைக் குறிப்பிடாமல் படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி வரும் ஜனவரி 26 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ‘ப்ரோ டேடி’ வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix