Published : 24,Dec 2021 12:37 PM

”கண்டிப்பாக ‘வலிமை’ வெளியானவுடன் பார்த்துவிடுவேன்”: வானதி சீனிவாசன் பேட்டி

vanathi-srinivasan-interview-about-ajith-valimai-movie

”அஜித்தின் ‘ வலிமை’ வெளியானவுடன் கண்டிப்பாக பார்த்துவிடுவேன்” என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இரண்டு பாடல்களும் விசில் தீமும் கவனம் ஈர்த்துள்ளது.

 முழு பேட்டியை விரிவாக வாசிக்க: ”பெண் திருமண வயது உயர்வில் மதத்தை இழுப்பவர்கள்தான் மதவாதிகள்” - வானதி சீனிவாசன் பேட்டி

வரும் பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது. படத்திற்கான எதிர்பார்ப்புகள் கூடியுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவருமான வானதி சீனிவாசன் புதிய தலைமுறை இணையதளத்திற்கு பிரத்யேகமாக அளித்தப் பேட்டியில் “’வலிமை’ படம் வெளியானதும் கண்டிப்பாக பார்த்துவிடுவேன்” என்று கூறியுள்ளார்.

image

அவரிடம், ‘வலிமை’ வெளியாகப்போகிறதே பார்ப்பீர்களா? என்று கேட்டதற்கு, “கண்டிப்பாக ’வலிமை’ படம் வெளியானவுடன் பார்த்துவிடுவேன். பொதுவாகவே, எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நல்லப் படங்களைப் பார்ப்பேன். அந்த நேரம் என்பது பெரும்பாலும் விமானத்தில் அமர்ந்து செல்லும் நேரம்தான். சமீபத்தில் ‘சர்தார் உத்தம்’ படம் பார்த்தேன். பிடித்திருந்தது” என்று கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்