புதுச்சேரியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அண்ணாசாலை அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டுநர் காக்குப்பத்தைச் சேர்ந்த ராஜா என்ற ராஜசேகர் (38) நின்றிருந்தார், அப்போது அவ்வழியாக வந்த 13 வயது சிறுமியை வீட்டில் விடுவதாக அழைத்துச் சென்று காக்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு சிறுமியை விடுவித்து வெளியில் சொல்ல கூடாது என மிரட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில்; போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆட்டோ டிரைவர் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்,
இவ்வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி செல்வநாதன் முன்பாக விசாரணை நடந்து வந்தது. இதையடுத்து விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது, அதில், ராஜா என்ற ராஜசேகருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு தரவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்