Published : 23,Dec 2021 02:06 PM

”எதிர் விமர்சனங்களை கடந்து ‘அண்ணாத்த’ வெற்றியடைந்துள்ளது”- நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி

Actor-Rajinikanth-shares-his-happiness-towards-Annaatthe-movie-success

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம், திரையரங்கில் வெளியாகி இன்றுடன் 50 நாள்களை கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, படத்துக்கு கிடைத்த ஆதரவுக்கு நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஹூட் செயலி வழியாக ஆடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதில், “எதிர் விமர்சனம், மழை ஆகியவற்றை கடந்து அண்ணாத்த வெற்றியடைந்துள்ளது. மழை இல்லையென்றால், படம் இன்னும் பெரிய வெற்றியடைந்திருக்கும். அண்ணாத்த வெற்றிக்கு இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஆகியோரின் நல்ல மனமே காரணம். பல இடர்களை தாண்டி அண்ணாத்த படப்பிடிப்பை முடித்தோம். நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், கைவிடமாட்டான்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி:'அபூர்வ ராகங்கள்' முதல் 'அண்ணாத்த' வரை - நடிகர் ரஜினிகாந்தின் பிரமாண்ட திரைப்பயணம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்