[X] Close

நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்.பி. மரணம்

MP-and-former-Union-Minister-E-Ahamed-passes-away-after-collapsing-in-Parliament

நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி., ஈ.அகமது இன்று அதிகாலை உயிரிழந்தார்.


Advertisement

நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத்தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எம்.பி ஈ.அகமது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் டெல்லி ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத் துடிப்பு இல்லாத நிலையில், செயற்கை சுவாசம் அளித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.15 மணிக்கு ஈ அகமது உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதனிடையே, மருத்துவமனைக்குள் தங்களை அனுமதிக்கவில்லை என்றும், உடலை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்படுத்துவதாக கூறியும் அகமதுவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதன்பின்னர், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அகமதுவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Advertisement

அகமது உயிரிழந்த தகவல் தெரிந்தவுடன், மருத்துவமனைக்கு வந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் விசாரித்து சென்றனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், வெளியுறவுத் துறை இணை அமைச்சராக ஈ.அகமது பதவி வகித்தார். கேரளாவின் மலப்புரம் தொகுதி எம்.பி.யாக அவர் இருந்து வந்தார்.


Advertisement

Advertisement
[X] Close