Published : 05,Dec 2021 02:07 PM
“ஒன்றிணைவோம் கரம் கோர்ப்போம்” – ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சூளுரை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் வருகை தந்த வி.கே.சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.
வரும் தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்படுவோம், கரம் கோர்ப்போம் என்று அந்த சூளுரையில் தெரிவித்தார்.
இதனைப்படிக்க...தந்தை குறித்து அவதூறு: ஜெயக்குமார் - செல்லூர் ராஜூ இடையே கடும் வாக்குவாதம்