Published : 27,Nov 2021 12:46 PM

 “பென்சிலை திருடிவிட்டான்” - போலீஸிடம் புகார் செய்த ஆந்திரா பள்ளி சிறுவர்கள்: வைரல் வீடியோ

Viral-Video-andhra-Primary-School-Students-Go-To-Cops-Over-Pencil-Problem

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர், பென்சிலைத் திருடிய தங்கள் வகுப்புத் தோழன் மீது புகார் அளிக்கவேண்டும் என்று காவல் நிலையம் சென்று கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிப்ரவரி மாதத்தில் படமாக்கப்பட்ட இந்த வீடியோ, இப்போதுதான் சமூக வலைதளங்களில் வைரலானது. ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹனுமந்தா, கர்னூலில் உள்ள பெட்டகபாதூர் காவல் நிலையத்தில், தனது பென்சினை திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டவகுப்புத் தோழனுடன்சென்று அவன் மீது நடவடிக்கை எடுக்கும்படி  காவலர்களிடம் கோரிக்கை வைக்கிறான்.

image

இந்த வீடியோவை ஆந்திரப் பிரதேச காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளது. இந்த ட்வீட்டில், "ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள் கூட ஆந்திர காவல்துறையை நம்புகிறார்கள். ஆந்திரப் பிரதேச மக்களுக்கு நம்பிக்கை மற்றும் உறுதியளிக்கும் வகையில் ஆந்திரப் பிரதேச காவல்துறையின் அணுகுமுறை, நடத்தை மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் ஒரு முன்னுதாரண மாற்றம் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

இந்த வீடியோவில், ஒரு சிறுவன் தன் பென்சிலை எடுத்துக்கொண்டு அதைத் திரும்பக் கொடுக்கவில்லை என்று மற்றொரு சிறுவன் புகார் செய்வதை காட்டுகிறது. இந்த நிலையில் என்ன செய்யலாம் என்று அந்த சிறுவனிடம் போலீசார் கேட்டபோது, அந்த சிறுவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறான். இந்த நேரத்தில், அந்த சிறுவனின் சில நண்பர்கள் பின்னணியில் நின்றுசிரிப்பதைக் காணலாம். வழக்குப் பதிவு செய்வதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டசிறுவன் சிறைக்குச் செல்வார் என்றும், ஜாமீன் சிக்கலாக இருக்கும் என்றும், ஹனுமந்தா "பெரிய மனதுடன்" அவரை மன்னிக்க வேண்டும் என்றும்  போலீசார் கூறுகின்றனர். ஆனால், ஹனுமந்தா, குறைந்தபட்சம் குற்றம் சாட்டப்பட்டவரின்" தாயையாவது அழைத்து பேச வேண்டும் என்று பிடிவாதமாக வலியுறுத்துகிறார். முடிவாக இரண்டு குழந்தைகளும் சமரசம் செய்த பிறகு கைகுலுக்கி புன்னகைப்பதைக் காணலாம்.

இதனைப்படிக்க...பழனி: மற்றுமொரு பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; ஆசிரியர் கைது 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்