[X] Close

முத்தலாக் முறைக்கு 6 மாதம் இடைக்கால தடை

Supreme-court-interim-order-against-Tripel-talak


முத்தலாக் முறைக்கு 6 மாதம் இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

 
மூன்று முறை ‘தலாக்’ சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம், முஸ்லிம்களிடையே நிலவி வருகிறது. இது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்கக்கோரி, 5 முஸ்லிம் பெண்கள் உள்பட 7 பேர் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 
தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
’முத்தலாக்’ வழக்கம் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையா? என்பது பற்றி மட்டுமே தீர்ப்பு அளிப்போம் என்று நீதிபதிகள் ஏற்கனவே கூறியிருந்தனர்.
 
கடந்த மே 18ம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு இன்று மீண்டும் கூடியது. 

தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், மூன்று நீதிபதிகள் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று கூறியுள்ளனர். இஸ்லாமிய நாடுகளிலேயே முத்தலாக் நடைமுறை ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், சுதந்திர இந்தியாவில் இத்தகைய நடைமுறையை ஏன் ஒழிக்க முடியாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Advertisement

முத்தலாக் நடைமுறையில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றமே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது. அனைத்துக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து ஆறு மாதத்திற்குள் முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றம் முடிவு செய்து கொள்ளவும், அதுவரை மும்முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு தடைவிதிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close