விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படத்திற்கான திரையரங்குகள் கிடைத்து வருகின்றன என திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தை வினோத் என்பவர் தயாரித்திருக்கிறார். தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த திரைப்படத்திற்கு சில நாட்களுக்கு முன்பு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் உள்ளது என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, தமிழகத்தின் பல வினியோக பகுதிகளில் எனிமி திரைப்படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன என திரைத்துறையினர் கூறுகின்றனர். அதேபோல் இன்னும் சில ஏரியாக்களில் மட்டும் திரையரங்குகளை எனிமி திரைப்படத்திற்கு இறுதி செய்ய வேண்டியுள்ளது. அந்த வேலைகளும் திங்கட்கிழமை முடிந்துவிடும் என தெரிவிக்கின்றனர்.
இதனால் எனிமி திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகிறது. இந்த படம் தமிழகம் தவிர தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களிலும் வெளியாகிறது. அதேபோல் ஹிந்தியில் ஒரு வாரத்திற்குப் பிறகு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
- செந்தில்ராஜா
பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு அபராதம்: சென்னை மாநகராட்சி
Loading More post
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!