Published : 18,Aug 2017 12:11 PM
இணைப்பு எங்களை தனிமைப்படுத்த அல்ல: திவாகரன் மகன் ஜெயானந்த்

அணிகள் இணைப்பு எங்களைத் தனிமைப்படுத்த அல்ல என திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.
திவாகரனின் மகன் ஜெயானந்த் புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில், இரு அணிகளின் இணைப்பு என்பது எங்களை தனிமைப்படுத்துவதற்காக அல்ல எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், வேதா இல்லத்தை நினைவகமாக மாற்றும் அறிவிப்பை தாங்கள் வரவேற்பதாகவும், இந்த யோசனையை தனது தந்தை திவாகரன்தான் முதலில் தெரிவித்தார் என்றும் கூறினார். ஆனால் இதனை முதல்வர் ஏன் காலதாமதமாக அறிவித்தார் என்பது தெரியவில்லை எனவும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணையை விட சிபிஐ விசாரணை தேவை என்பதுதான் தங்களின் எதிர்ப்பார்ப்பு என்றும் ஜெயானந்த் தெரிவித்தார்.