[X] Close

ம.பி: ஈகோவை அழிக்க பிச்சையெடுக்க ஞாயிற்றுகிழமை விடுப்பு கேட்ட பொறியாளர் - வைரல் கடிதம்

இந்தியா

MP-engineer-asks-for-Sundays-off-to-go-begging-to-erase-ego-application-viral

மத்தியப் பிரதேசத்தில் தனது ஈகோவை அழிக்க ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாகச் சென்று பிச்சையெடுக்க வேண்டி பொறியாளர் எழுதிய விடுப்பு விண்ணப்பம் வைரலாகியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் மால்வா மாவட்டத்தில் பணியாற்றும் ராஜ்குமார் யாதவ் என்ற பொறியாளர் தனது ஈகோவை அழிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு வீடாகச் சென்று பிச்சையெடுக்க வேண்டி விடுப்பு விண்ணப்பம் எழுதியது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த கடிதத்தில் ராஜ்குமார் யாதவ், "திடீரென எனது கடைசி பிறப்பைப் பற்றி ஒரு ஃப்ளாஷ்பேக் கிடைத்தது. எனது முந்தைய வாழ்க்கையில் நான் ஒரு மகாபாரத கதாப்பாத்திரம். ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி எனது நண்பர் நகுலனாகவும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 'சகுனி மாமா'வாகவும் இருந்தார். எனவே  எனது இன்னும் அதிகமான ஆன்மீகத்தேடலுக்காக என் ஈகோவை அழிக்க ஞாயிற்று கிழமைகளில் பிச்சையெடுக்க விரும்புகிறேன், அதற்கு அனுமதியளிக்கவேண்டும்" என்றும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

image


Advertisement

ராஜ்குமாரின் கடிதத்திற்கு மூத்த பொறியாளர் எழுதிய பதில் கடிதத்தில், “அன்புள்ள துணைப் பொறியாளரே, நீங்கள் உங்கள் ஈகோவை அழிக்க விரும்புகிறீர்கள். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். தனது ஞாயிறுகளை விருப்பப்படி செலவிட முடியும் என்று நினைக்கும் ஒருவர் பெரும்பாலும் சுயநலவாதியாக இருப்பார். இந்த ஈகோவை அதன் வேர்களிலிருந்து அழிப்பது உங்கள் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. எனவே, ஆன்மீக முன்னேற்றத்திற்கான உங்கள் விருப்பத்தை கருத்தில் கொண்டு, ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை தினமாக கொண்டாடும் உங்கள் ஈகோவை அழிப்பதற்காக, அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வேலை செய்ய உத்தரவிடப்படுகிறது "என்று பதிலளித்தார்.

இதனைப்படிக்க...ஆப்கனில் தலிபான் அரசை சீர்குலைக்க முயற்சிக்கக் கூடாது -அமெரிக்காவுக்கு தலிபான் எச்சரிக்கை 


Advertisement

Advertisement
[X] Close