Published : 11,Sep 2021 10:39 AM
பாரதியாரின் 100வது நினைவு நாள்: தமிழில் நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

பாரதியாரின் 100-வது நாள் நினைவு நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்'' என பிரதமர் பதிவிட்டுள்ளார்.
சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்.
— Narendra Modi (@narendramodi) September 11, 2021
மேலும் அவர், '2020 டிசம்பரில் அவரைப்பற்றி நான் பேசியது இதோ' என யூடியுப் வீடியோவின் லிங்க் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
2020 டிசம்பரில் அவரைப்பற்றி நான் பேசியது இதோ. https://t.co/dAFph8Sfap
— Narendra Modi (@narendramodi) September 11, 2021