Published : 09,Sep 2021 12:08 PM
தமிழகத்தில் 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.4-ல் தேர்தல்
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வரும் அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் வைத்திலிங்கமும், கே.பி.முனுசாமியும் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வரும் அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் செப்டம்பர் 22-ம் தேதி ஆகும்.
அக்டோபர் 4-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை நான்கு மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுகவின் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.