[X] Close

"ஆப்கானை படுகுழியில் தள்ளிவிட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்" - அமெரிக்காவை சீண்டும் சீனா

உலகம்

China-Slams-US-for-Leaving-an----Awful-Mess-of-Unrest----in-Afghanistan

ஆப்கானிஸ்தானை தற்போதைய மோசமான நிலைக்கு தள்ளிய நாடுகள் அதற்கு பதில் சொல்லாமல் தப்பிக்க முடியாது என அமெரிக்காவை சீனா மறைமுகமாக விமர்சித்துள்ளது


Advertisement

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையிலும் அமெரிக்க படைகள் வெளியேறியுள்ள நிலையிலும் அங்கு மோசமான சூழல் நிலவுகிறது. தலிபான்கள் ஆட்சி எப்படி இருக்குமோ என மக்கள் ஒருபுறம் அஞ்சி வரும் நிலையில் மறுபுறம் விலைவாசிகள் ஏறி அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான குடும்பங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

image


Advertisement

இந்நிலையில் பெய்ஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், ''ஆப்கானிஸ்தானை இந்த நிலைக்கு தள்ளியவர்கள் அதற்கு பொறுப்பேற்பதில் இருந்து தப்பிக்க பார்க்கிறார்கள். அவர்கள் தவறு செய்து விட்டு மற்ற நாடுகள் மீது பழி சுமத்த பார்க்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்ப தங்கள் நாடு பாடுபட்டு வருகிறது'' என்றார்.

இதற்கிடையில் சீனாதான் உலகில் தங்கள் முக்கியமான கூட்டாளி என தலிபான்கள் கூறியுள்ளனர். சீனா தங்கள் நாட்டில் பெரிய அளவில் முதலீடுகள் செய்து புனர் நிர்மாணம் செய்ய உள்ளதாகவும் தலிபான்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்கலாமே: வெறும் உள்ளாடையுடன் ஓடும் ரயிலில் உலாவிய பீகார் எம்.எல்.ஏ


Advertisement

Advertisement

Advertisement
[X] Close