[X] Close

காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்கள் குறித்து பேச எங்களுக்கு உரிமை உள்ளது - தலிபான் அமைப்பு 

உலகம்

We-have-the-right-to-talk-about-the-Muslims-in-Kashmir-India-says-the-spokesperson-of-Taliban-organization

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு விரைவில் அங்கு ஆட்சி அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்கள் குறித்து பேச தங்களுக்கு உரிமை உள்ளது என தலிபான் தெரிவித்துள்ளது. 


Advertisement

image

உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஆதரவாக பேசுவது தங்கள் உரிமை என்றும், இதில் காஷ்மீரும் அடங்கும் என தலிபான் தெரிவித்துள்ளது. 


Advertisement

“இஸ்லாமியர்கள் உங்கள் நாட்டை சேர்ந்த மக்கள், உங்களது குடிமகன்கள், உங்கள் நாட்டின் சட்டத்தின் கீழ் அவர்களுக்கும் சம உரிமை உள்ளது என நாங்கள் நிச்சயம் குரல் கொடுப்போம்” என தெரிவித்துள்ளார் தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன். இதனை அவர் சர்வதேச ஊடக நிறுவனமான பிபிசி-க்கு தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில் எந்த நாட்டுடன் ஆயுதம் ஏந்தி போர் தொடுக்கும் கொள்கை தங்களுக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 

image


Advertisement

அல்-கெய்தா அமைப்பு ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க உள்ள தலிபான்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது. அதில் காஷ்மீர் மாதிரியான பகுதிகளின் விடுதலைக்காக ஒன்றிணைவோம் என தலிபான்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்கலாம் : வெறும் உள்ளாடையுடன் ஓடும் ரயிலில் உலாவிய பீகார் எம்.எல்.ஏ


Advertisement

Advertisement
[X] Close