[X] Close

கோவையில் புதிதாக எய்ம்ஸ் கல்லூரியை நிறுவ மத்திய அரசுக்கு மா.சுப்ரமணியன் கோரிக்கை

வீடியோ ஸ்டோரி

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கவும், கோவையில் புதிதாக எய்ம்ஸ் கல்லூரியை நிறுவுமாறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து, தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.


Advertisement

டெல்லி சென்ற தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாயைச் சந்தித்து, தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். தமிழகத்தில் 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடங்கவும், செங்கல்பட்டு, நீலகிரியில் தடுப்பூசி உற்பத்தி மையங்களை செயல்படுத்தவும் அப்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

image


Advertisement

மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை தொடங்கவும் வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கவும், கோவையில் புதிதாக எய்ம்ஸ் கல்லூரியை நிறுவுமாறும் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

இதையும் படிக்கலாமே: சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல்:ஆதரவாளர்கள் முட்டிபோட்டு போராட்டம்


Advertisement

Advertisement
[X] Close