[X] Close

ஓவல் டெஸ்ட்: அடுத்தடுத்து ஆட்டமிழந்த ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் - இந்திய அணி நிதான ஆட்டம்

விளையாட்டு

Indian-Cricket-Team-Opening-Batsman-Rohit-Sharma-out-for-11-Runs-in-Oval-Test-First-Innings

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும்  மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


Advertisement

ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதல் போட்டி டிரா ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்றது. இதனால், டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் இந்தப் போட்டியில் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், ரோகித் சர்மா முதல் இன்னிங்க்ஸில் 11 ரன்களில் அவுட்டானார். 27 பந்துகளை சந்தித்த அவர் கிறிஸ் வோக்ஸ் வேகத்தில் விக்கெட்டை இழந்துள்ளார். இந்த தொடரில் மொத்தம் 7 இன்னிங்ஸ் விளையாடி உள்ள அவர், இரண்டு முறை அரை சதம் பதிவு செய்துள்ளார். அதோடு மொத்தமாக 241 ரன்களையும் குவித்துள்ளார். இந்நிலையில் அவர் விக்கெட் இழப்பு இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. 


Advertisement

அதேபோல், கே.எல்.ராகுல் 17 ரன்கள் எடுத்த நிலையில் ராபின்சன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி நல்ல தொடக்கத்தை கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதை தொடக்க வீரர்கள் செய்ய தவறி உள்ளனர். இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். 

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சமநிலையில் உள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை பெறலாம். தற்போது கேப்டன் விராட் கோலியும், புஜாராவும் களத்தில் உள்ளனர்.

இதையும் படிக்கலாம் : ஓவல் டெஸ்டில் டாஸ் வென்றது இங்கிலாந்து - இந்தியா பேட்டிங் : ஆடும் லெவன் விவரம்


Advertisement

Advertisement

Advertisement
[X] Close