[X] Close

"டி20 உலகக் கோப்பையில் இந்த வீரர் முக்கிய பங்கு வகிப்பார்" - தினேஷ் கார்த்திக்

விளையாட்டு

Dinesh-Karthik-names-youngster-who-can-play-a-major-role-for-India-in-T20-WC

டி20 உலகக் கோப்பைக்கு செல்லவுள்ள இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டால் அவர் போட்டியில் முக்கிய பங்கு வகிப்பார் என்று இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.


Advertisement

இது தொடர்பான கலந்துரையாடலில் பேசிய தினேஷ் கார்த்திக் "இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட வேண்டும். அவரிடம் ஒரு தனித்துவம் இருப்பதாக நினைக்கிறேன், அவர் ஒரு ஸ்பெஷலான வீரர். இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டால் ஆட்டத்தில் பல அற்புதங்களை அவர் ஏற்படுத்துவார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். முக்கியமான போட்டிகளின் முடிவுகளை மாற்றக்கூடிய சுழற்பந்துவீச்சு திறன் அவரிடம் இருக்கிறது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் வருண் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார்" என்றார்.

image


Advertisement

மேலும் பேசிய அவர் "உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒரு இந்தியனாக நம்நாடு கோப்பையை வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இந்தியாவுக்கு அடுத்து என்னுடைய அடுத்த சாய்ஸாக வெஸ்ட் இண்டீஸ் இருக்கிறது. டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மிகவும் பிரமாதமாக விளையாடுகிறது. அதனால் அவர்கள் இறுதிப் போட்டிக்கு வர வேண்டும் என விரும்புகிறேன்" என்றார் தினேஷ் கார்த்திக்.


Advertisement

Advertisement
[X] Close