Published : 29,Jan 2017 10:49 AM
ட்ரம்ப் உத்தரவால் ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்ள முடியாத இயக்குனர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவால் ஈரானைச் சேர்ந்த இயக்குனர் அஸ்கர் பர்காடி ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராகக் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக் கொண்ட ட்ரம்ப், ஈரான், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார். இதனால், அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சலிஸ் நகரில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஈரான் நாட்டைச் சேர்ந்த அஸ்கர் பர்காடி கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டுப் படத்துக்காக ஆஸ்கர் விருது இறுதி பரிந்துரை பட்டியலில் அஸ்கர் பர்காடி இயக்கிய சேல்ஸ் மேன் படம் இடம்பெற்றுள்ளது.