[X] Close

இந்தியா: புதிதாக 41,649 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியா

india-corona-virus-update

இந்தியாவில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 8 ஆயிரத்தை கடந்துள்ளது.


Advertisement

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,649 பேர் தொற்றுக்குள்ளானநிலையில், மொத்த பாதிப்பு 3 கோடியே 16 லட்சத்து 13 ஆயிரத்து 993 ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் 593 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 810 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆவது நாளாக அதிகரித்து 4 லட்சத்து 8 ஆயிரத்து 920 ஆக இருக்கிறது. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை நேற்றை விட 3,765 அதிகமாகும். நாடு முழுவதும் 46 கோடியே 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close