Published : 06,Aug 2017 04:35 AM

11-ம் தேதி பதவியேற்கிறார் வெங்கய்ய நாயுடு

Naidu-will-be-sworn-in-as-the-new-Vice-President-of-India-on-August-11

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள வெங்கய்ய நாயுடு, வரும் 11-ம் தேதி அப்பதவியை ஏற்கவுள்ளார். 

தற்போதைய துணை ஜனாதிபதியான ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதி நிறைவடைகிறது. அதற்கடுத்த நாள் வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, ஜனாதிபதி தேர்தலில் மீராகுமார் பெற்ற வாக்குகளை விட துணை ஜனாதிபதி தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்திக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மீரா குமாருக்கு 225 எம்.பி.க்கள் வாக்களித்ததாகவும் ஆனால் கோபாலகிருஷ்ணகாந்திக்கு 244 எம்.பி.க்கள் வாக்களித்திருப்பதாகவும் காங்கிரஸ் பொது செயலாளர் குலாம் நபி ஆசாத் சுட்டிக்காட்டியுள்ளார்.