[X] Close

ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா: ஒலிம்பிக்கில் அதிகரிக்கும் அச்சம்

விளையாட்டு

ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள 3 வீரர்கள் உட்பட 10 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது


Advertisement

டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் தொடங்க உள்ள நிலையில், கொரோனா தொற்று தனது கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த ஒலிம்பிக் நிர்வாகி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 3 வீரர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் போட்டி நிர்வாகிகள் ஐவர், விளையாட்டு வீரர்கள் மூவர், பத்திரிகையாளர், ஒப்பந்தப்பணியாளர் தலா ஒருவர் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரை ஒலிம்பிக் பணியில் இருக்கும் 55 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் நிர்வாக கமிட்டி வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close