[X] Close

மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

சினிமா

rajinikanth-meeting-with-makkal-mandra-executives-today

அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட நிலையில், மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்திக்கவுள்ளார்.


Advertisement

தமிழகத்தில் கொரோனா பரவி வந்த சூழலில், தன்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் பணிகளில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த பலர் வேறு கட்சிகளில் இணையத் தொடங்கினர். மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் கடந்த 9-ஆம் தேதி சென்னை திரும்பினார். இந்த நிலையில், இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close