[X] Close

அண்ணாமலை நியமன கொண்டாட்டத்தில் போக்குவரத்து நெரிசல்; போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதம்

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

கரூரில் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கொரோனா விதிகளை மீறி பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியரும் சிக்கித் தவித்தார்.


Advertisement

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மாவட்டத் தலைவர் சிவசாமி தலைமையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டாவில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென தொண்டர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அப்போது அவ்வழியே வந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது.

அனுமதியின்றி கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு ஆட்சியர் காவல்துறையினருக்கு வாய்மொழி உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் பாஜக நிர்வாகிகளை கைது செய்ய முற்பட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்களை பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close