[X] Close

விரைவுச் செய்திகள்: முதல்வருடன் நடிகர் கார்த்தி சந்திப்பு| மேரிகோம், மன்பிரீத்க்கு கௌரவம்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Tamilnadu--India--World-news-till-6-PM

பேரிடர்களை எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே நோக்கம்:


Advertisement

அனைத்து பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் நோக்கம் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

ஒளிப்பதிவு திருத்த சட்டத்தால் திரைத்துறை பாதிப்பு:


Advertisement

மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தால் திரைத்துறையினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு நடிகர் கார்த்தி பேட்டியளித்துள்ளார்.

வசதிகளின்றி கட்டடம் கூடாது:

மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் இன்றி அரசு கட்டடங்கள் கட்டக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

30 வங்கிக் கணக்குகள் முடக்கம்:

ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களின் 30 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. கொள்ளை கும்பல் தலைவனை 7 ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி காலமானார்:

சமூக ஆர்வலரும், பழங்குடிகளுக்காக குரல் கொடுத்தவருமான ஸ்டான் சுவாமி காலமானார். மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிர் பிரிந்தது.

நீட் தேர்வு வழக்கு - மத்திய அரசுக்கு உத்தரவு:

நீட் தேர்வு பாதிப்பை ஆராயும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜகவின் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறந்ததாக சர்ச்சை - உயிருடன் இருந்த குழந்தை மீண்டும் மரணம்:

தேனியில் மருத்துவர்கள் இறந்ததாக கூறிய குழந்தை மயானத்தில் உயிருடன் இருந்ததால், மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தது.

கர்நாடகாவில் புதிய அணை - கட்டுமானப் பணியில் தமிழர்கள்:

மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா கட்டியுள்ள அணையின் கட்டுமானப் பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஓசூர், தளி, கிருஷ்ணகிரி பகுதி நிறுவனங்களில் இருந்து கட்டுமான பொருட்கள் சென்றது புதிய தலைமுறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நதிநீர் பிரச்னை குறித்து பேச உள்ளேன்:

மேகதாது, மார்க்கண்டேய நதி அணைகள் விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் செகாவத்துடன் பேச உள்ளேன் என தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.

கொரோனா சவாலை தனியாக எதிர்கொள்ள முடியாது - பிரதமர்:

கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கான 'கோவின்' தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கு வழங்கத் தயார் எனவும், கொரோனா போன்ற சவால்களை தனியாக எதிர்கொள்ள முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி உரையில் தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிராவில் 12 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்:

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக 12 பாஜக எம்எல்ஏக்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்:

வெள்ளப்பெருக்கால் கடலூர் - அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேரிகோம், மன்பிரீத் சிங்கிற்கு கௌரவம்:

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் குத்துச்சண்டை நாயகி மேரிகோம். ஆடவர் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்கும் அணிவகுப்பிற்கு தலைமை வகுப்பார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

கருப்புப் பூஞ்சையால் 30 பேர் கண் பார்வை இழப்பு:

கோவை மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 30 பேர் ஒரு கண்ணில் பார்வையை இழந்தனர். சிகிச்சைக்கு தாமதமாக வந்ததால் கண் பார்வையை இழந்ததாக அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்திருக்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close