’தனுஷ் 43’படப்பிடிப்பிற்காக அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத் வந்துள்ளார் நடிகர் தனுஷ்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ’தனுஷ் 43’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில், நடித்துக்கொண்டிருக்கும்போதே, ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்புகளுக்காக அமெரிக்கா சென்றார் தனுஷ். அவர், நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் ‘கர்ணன்’ வெளியானது, சமீபத்தில் ‘ஜகமே தந்திரம்’ வெளியானது. ஆனால், இப்படங்களின் புரொமொஷனுக்காகக்கூட தனுஷ் தமிழகம் வரவில்லை. தற்போது, ’தி க்ரே மேன்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், தனுஷ் ‘தனுஷ் 43’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் வந்துள்ளார். அவர்,ஹைதராபாத் வந்தடைந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
கடந்தவாரம் தனுஷ் மாஸ்க்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘தனுஷ் 43’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குவதாக சத்யஜோதி நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'மொழி அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்