[X] Close

செங்குன்றம்: மது போதையில் நண்பனுக்கு அரிவாள் வெட்டு; எஸ்.ஐ. மகன் உள்பட 3 பேர் கைது

குற்றம்,தமிழ்நாடு

3-people-arrested-including-the-son-of-an-sub-inspector-who-stabbed-a-friend-with-a-scythe-while-intoxicated-near-Chennai
சென்னை செங்குன்றம் அருகே மதுபோதையில் நண்பரை அரிவாளால் வெட்டிய சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ். இவர் இதே பகுதியில் டைல்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் இவரது நண்பர்களான இதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், குரு பிரசாத், ஆல்பர்ட் ஆகியோருடன் எம்ஏ நகர் ஜிஎன்டி சர்வீஸ் சாலை அருகில் மது அருந்தி கொண்டிருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 3 பேரும் சேர்ந்து பிரித்திவிராஜின் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது.
 
இதில் பலத்த காயமடைந்த பிரித்திவிராஜை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர்.இதில் சந்தோஷ் குமார் என்பவர் செங்குன்றம் சட்டம்-ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் கேசவன் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
[X] Close