[X] Close

வாகன சோதனையில் வாக்குவாதம்: வத்தலகுண்டில் இளைஞர்கள், போலீசார் இடையே மோதல் - வீடியோ

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

Battalakundu-Clashes-between-youths-and-police--Stirred-by-viral-video

வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடு காவல்நிலைய சோதனைச் சாவடியில் போலீசார் மற்றும் இளைஞர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ சமூக தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Advertisement

உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உள்ளிட்ட ஆறு பேரும் உசிலம்பட்டி அருகே உள்ள விருவீடு காவல்நிலைய சோதனைச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது அவர்களின் இருசக்கர வாகனம் போலீசார் அமைத்திருந்த சோதனைச்சாவடி பேரிகார்டு மீது மோதியது.


Advertisement

இந்நிலையில், அங்கிருந்த போலீசார் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக போலீசாருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. உடனடியாக, அங்கிருந்த போலீஸ் ஒருவர் அருகில் இருந்த வீட்டில் இருந்து உருட்டுக்கட்டை எடுத்து வந்தார். அதேநேரத்தில் இளைஞர் ஒருவர் அருகில் இருந்த தென்னம் மட்டை, மற்றும் கற்களை எடுத்து போலீசாரை தாக்கத் தொடங்கினார்.

இதனையடுத்து, போலீசாரும் அந்த இளைஞர்களை தடுத்துள்ளனர். இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் போலீசார் மீது தாக்குதல் நடத்தி இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close